More Menu

Welcome

Sign-in to explore more features

Register for free
Aahakalyanam

Support

  • Genuine profiles

    The most trusted wedding matrimony brand

  • Most trusted

    The most trusted wedding matrimony brand

  • 2000+ weddings

    The most trusted wedding matrimony brand

Terms & Conditions – Aha Kalyanam

வணக்கம்

பொறுப்பான பெற்றோர்களே, மணம்முடிய காத்திருப்போர்களே, மற்றும் நண்பர்களே நமது ஆஹா கல்யாணம் மேட்ரிமோனி ஒரு இணைய வழி சுயம்வர மேடை, பதிவு செய்த வரன்களுக்கு எளிதில் திருமணம் முடிய எதுவாக முழுமையான விவரத்துடன், + புகைப்படம் + ஜாதகங்கள் + தொலைபேசி எண் உள்ளதால், வரன் தேடும் பதிவு செய்த, பதிவு செய்யாத யாவரும் இருக்கும் இடத்தில் இருந்தே இலவசமாக குடும்பத்தோடு பார்த்து திருமண முடிவுகள் எடுக்கவும், உடன் திருமணம் முடித்திட தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் தில்லை மேட்ரிமோனி சுயம்வர மேடை (வரன் விளம்பர மேடை) வடிவமைக்கப்பட்டு உள்ளது. எந்த சிரமமும் இல்லாமல் 80 சதவீதம் பதிவு செய்தாலே திருமணம் முடிய வாய்ப்பு. ஆம், பதிவு மட்டும் செய்து இருந்தாலே போதும், வரன்கள் உங்களை தேடி வரும். ஒரு வருட திருமண விளம்பர சேவை கட்டணம் (நேரிலும் / ஆன்லைன் வழி சேவை): Rs.500 (குறிப்பு: நமது இந்திய ராணுவ பணி செய்பவருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் சலுகை உண்டு.) பதிவு செய்யாதவர்கள், பதிவு செய்தவர்கள் எல்லோரும் விளம்பர செய்துள்ள வரன்களை தினமும் இலவசமாக பார்க்க முடிவதால் விரைவில் திருமணம் முடிய ஏதுவாகிறது. நமது அதி அற்புதமான வெளிப்படையான சேவையை தாங்களும், தங்கள் உறவினர்களையும் பயன்படுத்த செய்து எல்லோருக்கும் உரிய வயதில் திருமணம் முடித்து, எல்லாம் வல்ல கடவுள் அருளால் எல்லாவளமும், நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.
தங்கள் அன்புள்ள கேதார செல்வர் K. Chandrasekar (+91 8015666798) https://aahakalyanam.co.in/
உங்கள் முழு ஜாதக விபரம் + புகைப்படத்துடன், உலகின் எந்த மூலையில் இருந்தும் நிமிடத்தில் பதிவு செய்யவும், பணம் செலுத்தவும் இலவசமாக பார்க்கவும், திருமணம் முடிக்கவும் முடியும். மேலும் புதிய பதிவு, பதிவில் திருத்தம், சந்தேகம், சிரமம், ஆலோசனைக்கு Email ID: aahakalyanaminfo@gmail.com கைபேசி எண்: (+91 8015666798) Pls AFTER Pay Send mail: aahakalyanaminfo@gmail.com / (+91 8015666798) பெற்றோர்களே, திருமண நிகழ்வுக்கு காத்திருக்கும் இளஞ்சர்களே, அன்பர்களே, உங்களுக்கு நல்வழி காட்டவே இந்த திருமண செய்தி... ஒருவருக்கு திருமணம் நடக்கவும், நடக்காமல் இருக்கவும் பல காரணங்கள் உள்ளது... திருமண வரன் தேடும் முறை ( சம்பந்த பட்ட வரனுக்கு விரைவில் திருமணம் ஆகவேண்டும் என்ற எண்ணம் இருக்க்கும் பட்சத்தில் நமது இந்திய தேச ஹிந்து திருமண சட்டப்படி வயது,தகுதிகள்,குடியுரிமை...இருக்க வேண்டும் மேலும் குடும்பம் நடத்த போதுமான உடல் வளர்ச்சியும் , மனமும் தெளிவு பெற்ற குறைந்த பட்ச ஆணின் மண வயது ,பெண்ணின் மண வயது இருக்க வேண்டும் )

1. நாம் படித்த உடன் விரைவில் வேலை கிடைக்க பல வேலைவாய்ப்பு மையங்கள், இணையதளங்களில் பதிவு செய்வது போல, நமக்கு திருமணம் விரைவில் நடைபெற திருமண தகவல் மையங்கள் மற்றும் marriage websites-ல் பதிவு செய்வது நடைமுறை. வரன் விவரங்களை உள்ளடக்கிய பக்க பயோடேட்டா தயார் செய்ய வேண்டும்: பிறந்த தேதி, படிப்பு, வேலை/வருமானம், முகவரி, தொடர்புக்கு இரண்டு கைபேசி எண்கள். முழு விபரம் மற்றும் ஜாதகம் அடங்கிய ஒரு பக்க பயோடேட்டாவை DTP செய்து குறைந்தது பத்து நகல்களை எப்போதும் வைத்திருங்கள். கூடுதலாக 10 அஞ்சல் அட்டை அளவு (postcard size) பெரிய நல்ல புகைப்படம் அல்லது full size/half size photo இருக்கட்டும். புகைப்படம் எடுக்க நேரம் இல்லை என பழைய குட்டி பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வைத்துக்கொண்டு ஒப்புக்கு வைத்திருந்தால், இதை விட திருமணம் தள்ளி போக வேறு காரணமே தேவை இல்லை!

2. லட்சங்களும் லட்சணமும் கைமாறும் கல்யாண வைபோகத்தில் சில ஆயிரம் செலவு செய்வது நல்லது. தகவல் மையங்களில் பதிவு செய்வதை அதிகமாக்குங்கள் — செலவு குறைவு, பலன் அதிகம். முழுமையான விபரம் கொடுக்காத திருமண அமைப்பாளர்கள், கமிஷன் ப்ரோக்கர்கள், திருமண ஏற்பாட்டுக்குழுக்களால் வீண் அலைச்சல் மற்றும் செலவுகள் ஏற்படும். சமுதாய திருமண தகவல் மையங்களில் பதிவு செய்வது மிகவும் நல்லது. எதிர்பார்ப்புக்கு ஏற்ப வரன் தேடுவதை அதிகமாக்குங்கள் (திருமண தகவல் மையம், matrimony websites). தேட முடியாதவர்கள் எதிர்பார்ப்பை குறைத்தால் திருமணம் கைகூடும்.

3. அப்ப அப்ப அதிக பணம் கேட்டு தொல்லை கொடுக்காத திருமண இணையதளங்களில் பதிவு செய்வது நல்லது. நம்ம தில்லை திருமண தகவல் மையத்துக்கும் புகைப்படத்துடன் ஒரு முழு ஜாதக விபரத்தை அனுப்பி வையுங்கள் — இலவசமாக பதிவு செய்து கொள்கிறோம்.

4. வரன் தேடுபவர் நேர்மறை எண்ணம் (positive thinking) மற்றும் அனுபவம் உள்ளவராக இருந்தால், விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு அதிகம். மாதம் ஒருமுறை பதிவு செய்த மையங்களில் வரன் தேடுங்கள், அல்லது தொடர்ந்து இணையதளங்களில் தேடுங்கள். எதிர்பார்ப்புகள்: வயது, படிப்பு, நிறம், உடலமைப்பு, உயரம், குடும்ப அமைப்பு, விருப்பு/வெறுப்பு — இவை அனைத்தையும் ஒரு note புத்தகத்தில் எழுதி கொண்டு வருங்கள். ஒவ்வொன்றாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வரன் குடும்பத்துடன் நேரடியாக உரையாடுங்கள். இருவருக்கும் பிடித்திருந்தால், பயோடேட்டா மற்றும் புகைப்படங்களை மெயில் அல்லது கடிதம்/கூரியர் மூலமாக பரிமாறிக் கொள்ளலாம்.

5. இரு குடும்ப பெரியவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே வரன் பார்க்க ஏற்பாடு செய்யுங்கள். இல்லையெனில் வரன் பார்க்கவே வேண்டாம் — இதனால் மனஉளைச்சல் மற்றும் பணவிரயம் தவிர்க்கப்படும். உலகில் பலவிதமான ஆட்கள் இருக்கிறார்கள் — அன்பானவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், அதிகம் படித்தவர்கள், கருமிகள், நல்லவர்கள், கெட்டவர்கள்... இதை மறக்காதீர்கள். மனநலத்துடன், நம்பிக்கையோடு தொடர்ந்த முயற்சி செயுங்கள். திருமணம் விரைவில் நடைபெறும்.

6. வரன் பிடிக்கிறதா இல்லையா என பதில் சொல்ல யார் தயங்குகிறாரோ அல்லது தள்ளி போடுகிறாரோ — அவருக்கு பிடிக்கவில்லை என்பதற்கே சமம். வேண்டுமானால் காரணம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பேர் பொருத்தம் என்கிற நட்சத்திரமே போதுமானது ராஜு -கழுத்து பொருத்தம் ,யோனி,-என்கிற வாயிற்று பொருத்தம் ....என பத்து பொருத்தம் .இருக்கிறது இதுவே போதுமானது என்பது என் கருத்து , கட்டதையே பார்த்துக்கொண்டு இருந்தால் கல்யாணம் பண்ண முடியாது, குற்றதையே பார்த்துக்கொண்டு இருந்தால் குடும்பம் நடத்த முடியாது. - பழமொழி இறைவனை உறுதியோடு பற்றிக் கொண்ட பக்தர்களுக்கு நாள் என்ன செய்யும்? வினை தான் என்ன செய்யும்? நம்மை நாடி வந்த கோள் என்ன செய்யும்? கொடுங் கூற்று என்ன செய்யும்? - அருணகிரிநாதர் இறைவனையே தஞ்சமாக அடைந்த அடியார்களுக்கு கிரகங்களால் வரக்கூடிய துன்பம் வராது - ஞானசம்பந்தர் பிடித்து இருந்தால் திருமணத்தை நல்ல நாள் பார்த்து முடிக்குங்கள். சுபம்! இலவசமாக பதிவு செய்ய வேண்டுமா? தங்கள் முழு ஜாதக விபரதுடன் + புகைப்படத்தை இணைத்து Address: 109/2, சீனிவாசன் சுவாமி தெரு, பழமலை சுவாமி கார்டன், ஆலடி ரோடு, விருத்தாசலம்-606001 Phone: (+91 8015666798) Email: aahakalyanaminfo@gmail.com இந்த முகவரிக்கு அஞ்சல் அல்லது கொரியர் மூலமாக அனுப்புங்கள், நாங்கள் இலவசமாக பதிவு செய்து வரன் தேடும் மற்ற பெற்றோர்கள் பார்வைக்கு உங்கள் முழு விபரத்தை பார்வைக்கு (Files) வைக்கிறோம். மேலும் வரன் தேட விரும்பினால் மட்டும் ரூ.500 சேவைக்கட்டணம் செலுத்துங்கள். வேறு கட்டணமோ, கமிஷனோ எப்போதும் பெறுவது இல்லை. கட்டணம் செலுத்திய வரன் விபரத்தை நமது இணையதளத்தில் எல்லோரும் இலவசமாக பார்க்கும் படி விளம்பரம் செய்கிறோம்: https://aahakalyanam.co.in/ மேலும் Free Horoscope, Astro Tips and Marriage Tips Helpful NEWS Just click: https://aahakalyanam.co.in/

எல்லோருக்கும் விரைவில் திருமணம் முடிந்து வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

By registering on Aha Kalyanam, you agree to follow these Terms & Conditions.

Copyright © 2025 theateliercreattion.com All rights reserved.